மழை - உதயா

உருமி மேலம் கொட்ட கொட்ட
வெள்ளிக் கம்பி தொட்டி தாலாட்ட
யாரும் காணாத கொலுசு அணிந்து ஓடிவராளே
இளமனதினை பறித்திடவே ஆடிவராளே

சூட்டையெல்லாம் தணித்திடவே
கூதானமா அசைந்துவரா
குளிர் ஆடைப் போர்த்திக்கிட்டே
பரவசமா பாடிவரா
பவளமல்லி உடையளித்து ஓடிவராளே
அவள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டே ஆடிவராளே

காக்கை குருவியெல்லாம்
கூட்டை நோக்கி பறந்துவோட
வெளிநாட்டு நடனம் போல
குளிரிலே நடுங்கி ஆட
மூலையில் குத்தவச்சியிருக்கும்
கிழவியையெல்லாம் சிட்டாக ஓடவைக்க
அவள் குத்தாட்டம் போட்டுக்கொண்டு
பாய்ந்துவராளே
உழவன் வயிற்றுக்கெல்லாம்
பாலை ஊட்டி மகிழ்ந்துவராளே

பசுமை பதுமைகளும்
தென்றல் தூக்கும்
பல்லாக்கி வளர்ந்துவர
அன்னக் கொடியினையும்
ஊன்றி வைத்தாளே
உலகம் உணவருந்த
காரணமாய் மாறி நின்றாளே

காற்றின் உதவியுடன்
ஜன்னல் கதவில் மெட்டுத்தட்டி
அவள் கரத்தால் என்னை பற்றி
கடல் வரைக்கும் அழைத்துச்சென்று
மறுதினம் கதிரவன்
பார்வைப்பட்டு பறந்து போனாளே
எங்கள் மனதிற்குள்ளே
ஏக்கங்களை விதைத்து சென்றாளே

அவள் வருகை முடிந்தப் பின்னே
அமைதியெங்கும் நிறுவியது
ஆதவன் கண்கள் மீண்டும்
அகிலமெங்கும் பரவியது
புல்லின் நுனிகளிலே
பளிங்குமண்டபமும் பிறந்தது
அது பார்ப்போரை கவர்ந்தது
கொஞ்சம் தொட்டுப் பார்க்க ஈர்த்தது

வேடன் செதுக்காத வில்லொன்று
விண்ணில் வளைந்தது
நெசவன் கைப்படாத
வண்ணங்களும் அதில் இருந்தது
வண்ணத்துப் பூச்சியெல்லாம்
அதனை நெருங்கியே பறந்தது
புவியினை துளைத்துக் கொண்டே
ஈசல்களும் பிறந்தது
இரவெல்லாம் அலைந்தது
மறுதினத்தில் மாய்ந்தது

அதிசியம் ஒவ்வொன்றாய்
மென்மையாய் மலர்ந்தது
தென்றலின் வருகைகள்
வெகுவாக தொடர்ந்தது
மண்ணும் வாசனையை
மெதுவாக உமிழ்ந்தது
அது புஷ்பத்தின்
மணத்தைவிட சிறந்தது
அமிர்தத்தின் தன்மையைவிட
உயர்ந்தது

எழுதியவர் : udayakumar (7-Jun-15, 2:17 pm)
பார்வை : 393

மேலே