என்னோடு நீ யிருந்தால்

       

     என்னோடு நீ இருந்தால்


 என் கார்மேகக்கூந்தல் எந்த காரணமு மில்லாமல் களைந்து களைந்து   போகும்
உன் மீசையைக் கண்ட பொழுது...

என் சுட்டும் விழி பார்வையும்
சுருண்டு சுருண்டு குளிர்ந்து போகும்
உன் சூரியப் பார்வையில் மயங்கி...

வெட்ட  வெளி வெண்ணிலா போல்
என் அழகும் தேய்ந்து தேய்ந்துபோகும்
உன் அழகான தமிழ் நடை கண்டதும்...


ஏழுவர்ண வானவில்லாக என் புருவம் ஒவ்வொரு நிறமாக பிரிந்து பிரிந்து ரசித்து மகிழும்
உன் அம்புவிழி  புருவம் கண்டு...


அழகு நிறைந்த பட்டாம் பூச்சியும் வண்ணச் சிறகுகளை அசைத்து திறந்துதிறந்து மூடும்
உன் திசையறியாமல் தொலைந்துபோகும்....

உன்னை அருகில் கண்டதும் வண்ணம் கொண்ட மலர்களாகி நானும்
சுகந்த  வாசத்தோடு   மறந்து மறந்து போகும் ...

உன் சுவாசப்புன்னகையைக் கண்டு அலையும் கடலைப்போல என் மனம் என்னோடு  உறைந்து உறைந்து ஒளியும்
உன்னைக் கண்ட வெட்கத்தில்.....

புயலாய் நீயும்தென்றலாய் நானும் பகிர்ந்திடும் மவுன  வார்த்தைகளை இனிய ராகத்தோடு  என்  செவிகளை 
மீட்டெடுக்கும் மீண்டும் மீண்டும்...

படர்ந்து விரிந்த புல்வெளி யில் நானும் படர்ந்திருக்கும் பனித் துளி யாய்நீயும்
அசையாமல்  சேர்ந்தே யிருக்கும் என்றும் என்னோடு  நீ யிருந்தால்....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-Jun-15, 7:33 am)
பார்வை : 207

மேலே