விவாசயம் -போட்டி கவிதை
விவாசயம் காணாம
போச்சு !
கம்மாய் நடுவிலும்
கல்லு ஊண்டியாச்சு !
கத்திரிக்கா கூட
தங்கம் போல விலையும்
ஏறிபோச்சு !
ஆப்பிள் கூட அமெரிக்காவில்
இருந்து இறங்கியாச்சு !
ஆடிகாரில் போனாலும்
அரை ஜான் தான்
வயிருடா !
ஏழை பணக்காரன்
ரெண்டு பேருக்கும்
பசிக்கும்டா !
ஈசல் போல மக்கள்
தொகை இரண்டு பில்லியன் ஆச்சு !
இனி வரும் எல்லோருக்கும்
சோறு இருக்குமா
கேள்விகுறியாச்சு ?
கொஞ்சநெஞ்சம் இருக்கும்
நிலத்தை கூறு போடவேணாம் !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !
-செந்தூர் பாண்டியன்