ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கட்டப்பட்டு வாழாது
இட்டப்பட்டு வாழ்க
இனிக்கும் வாழ்க்கை !

உற்று நோக்குங்கள்
வாகை உள்ளது
வாழ்க்கையில் !

பிறப்பு இறப்பு
இரண்டிலும் ஒரு மெய்
வாழ்க்கை இரு மெய் !

புரியாத புதிர்
புரிந்தால் கரும்பு
வாழ்க்கை !

பலருக்கு உயிருள்ளவரை
சிலருக்கு உலகம் உள்ளவரை
வாழ்க்கை !

வாழ்வாங்கு வாழ்
இறந்தபின்னும் வாழ்வாய்
வாழ்க்கை !

இன்பம் துன்பம்
இரண்டின் கலப்பே
வாழ்க்கை !

தனக்காக வாழ்வதல்ல
பிறருக்காக வாழ்வதே
வாழ்க்கை !

கவலையால் தீராது கவலை
உழைத்தால் தீரும் கவலை
வசமாகும் வாழ்க்கை !

மூச்சு நின்றவுடன் முடிவதல்ல
அதற்குப் பின்னாலும் தொடரும்
வாழ்க்கை !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (10-Jun-15, 7:26 pm)
பார்வை : 156

மேலே