கொஞ்சமாய்
கண்ணிரண்டு நதிகளடி நெஞ்சினுள்
கடகடவெனப் பாய்ந்ததடி
முன்னிருந்த புனனகையும் -எனை
உள்ளுறக் கொல்லுதடி
பொன்னிறத் தகடொன்று
உன்னிடமாய் வளைந்தபடி
தொங்கிச் சரிந்தவ்விடத்தில்
என் உயிர் நின்றுதவிக்குதடி
இதழ்சிந்தும் நிறந்தனையால்
எங்கும் நிறத்த உன் எழில்
கொஞ்சும் மேனிக்குள்ளாய் - நான்
கொஞ்சமாய் நுழைந்துவிட்டேன்.