பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு -விபத்து

சிறுகதை செம்மல் பொள்ளாச்சி அபி அவர்களின் விபத்து சிறுகதை,சிறுகதைக்கே உரிய பண்புகளோடு அமைந்தது சிறப்பு.அபி அவர்கள் கதையின் மைய கதாபாத்திரமான மாரிமுத்துவை நன்றாக செதுக்கயுள்ளார் என்பது அனைத்து வாசகர்களின் மனதில் எழும் தீர்க்கமான எண்ணமாகும்.
"ஆக்சிடென்ட் ஆனதிலே இருந்து ஒரு வாரமா மேட்டுதொப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிருக்குனு சொல்றாங்க "," மேட்டுதொப்பு பன்னாடிக்கு ஒரு வாரமா கண்ணு தெரியரதில்லயமா?"
"வீட்டிலேயும் எப்போபாத்தாலும் பொண்டாட்டி ,பிள்ளைகளோட மல்லுகட்டிகிட்டே திரியறாராம்"
மேற்கண்ட சம்பாஷணைகளின் மூலம், நாம் ஒன்று என்றால் ஊர் மூன்று என்று சொல்லும் எதார்த்தத்தை எடுத்துரைக்கிறது .
பேருந்தினுள் அபி அவர்கள் சிறுகதையின் சாரம்சமான திருப்பத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். .ஊரில் பெரியாட்கள் அதாவது பெரிய சாதிக்காரர்கள் மற்றவர்களை இழிவாக எண்ணி நடத்தும் செயலையும் ,"கடவுளுக்கு நிகரானவர்கள் எஜமானர்கள் " என்ற எழுதப்படாத விதியையும் எதார்த்தமாக எடுத்தாண்டுள்ளார் சிறுகதை சிற்பி..."உன்னுடையதும் அவருடையதும் ஒரே ரத்தம் தான் ","நீயும் மனுசன்தனே " என்று அபி குறிப்பிடுவது ,"என்ன நிறமிருந்தாலும் அவையாவும் ஒரே தரமன்றோ "என்ற முண்டாசு கவிஞரின் வாக்கை எடுத்துக்காட்டி ,இனிமையான முடிவை தந்தது அபி அவர்களின் தனிசிறப்ப்பாகும்...
"இது என் சொந்த படைப்பே "

எழுதியவர் : Boopalan சுந்தரம்பாள் (12-Jun-15, 12:14 pm)
பார்வை : 85

மேலே