அவளாள் தலை கீழாய் மாறியது

பேலன்ஸ் இல்லா போனில்
மிஸ்டு காலாய் சினுங்குகிறாள்
இந்த மிஸ் இந்தியா

ஆஸ்கார்க்கு உருவம் கொடுத்த அழகி இவளோ
நிலவுக்கு புன்னகை கொடுத்தது இவளது உதடோ

அவளை பார்த்த பின்னே அரிச்சந்திரன்
பொய் சொல்கிறான் கவிதை மூலம்

அவள் கூந்தல் கோரும் போது கம்பன்
கற்பனை திறனை இழந்தான்

அவள் முகம் பார்க்க நீரும்
கண்ணாடியாய் கண்திறக்கும்

அவள் காதல் சொல்ல வந்தால்
என்னோட இதயம் மட்டும்
வாசல் ஆகும்

அவள் செடி நட்டு வைத்தால்
இந்த பூமி ஜாடி ஆகும்

அவள் மழையில் சென்றால்
மலர் கூட குடை ஆகும்

அவள் வெயிலில் சென்றால்
புல் கூட நிழல் தரும்
எறும்பு அவளோடு துணைக்கு வரும்

அவள் பாதங்கள் பதியும் சுவடு
பல இளஜெர்களின் மன மாகும்

எப்படியோ சேர்ந்து விட்டால்
காதல் செய்து சோர்ந்து விட்டால்
எனவே அழகாக ஓய்வு எடுக்கிறாள்
மனதில் ...............

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (14-Jun-15, 9:17 pm)
பார்வை : 168

மேலே