யாதுமாகி.. .....
உனது முதல் சந்திப்பு
உனது முதல் ஸ்பரிசம்
உனது முதல் கடிதம்
உனது முதல் முத்தம்
கடைசியாக
உதறிவிட்டுப்போன
கண்ணீர்.......
(கூடவே என் இதயமும்)
பரணில் பதுக்கி
வைத்திருந்த
உனது புகைப்படத்தை
கள்ளத்தனமாய்
யர்ரும் அறியாது
பார்க்கிற பொழுதெல்லாம்
எக்காளமிடும் நினைவுகள்
சாவி கொடுத்த பொம்மைமாதிரி
கைகொட்டிச்சிரிக்கும்...
கன்னத்தில்
நரைத்த முடிகள்
கேலி செய்கின்றன...
காலம் போன கடைசிதான்..
காதல் போவதில்லையே
கடைசிவரைக்கும்.....???!!!