ரௌத்திரம் பழகினேன்
ரௌத்திரம் பழகினேன்!
தயவு செஞ்சி இத படிக்காதிங்க!
உங்களுக்கும் இது நடந்திருக்கலாம்!
கோபத்தின் உச்சாணிகொம்பில் இருந்து ஒரு பதிவு,
சமூகத்தை சற்று உற்று கவனித்தேன், சமுத்திரமாக ரௌத்திரம் பெருக்கெடுத்தது.இங்கே நான் குறிப்பிடுவது முறையற்ற சமூக மனிதர்களை,சக மனிதர்களை மதிக்க தெரியாத மாமிச பிண்டங்களை.
ஜனக் கோடியில் இன்னும் மக்காத ஜனக் குப்பைகளை பற்றியது எனது ரௌ(ஆ)த்திரம்.
#மருத்துவமனைக்கு செல்கிறோம் அங்கே மருத்துவர் அன்னை தெரசாவாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை,மருத்துவராக இருந்தாலே போதும்! முள் தரிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி நோயகளிகளை வருத்தபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,மனித உடலை பற்றி மெத்த படித்த மருத்துவர் மனித மனதை சற்று படித்து வைத்திருந்தால் நலம்!சேற்றில் பூத்த செந்தாமரையாக சில மருத்துவர்கள் இருப்பது ஒன்றே தற்காலிக ஆறுதல்...
#பேருந்தில் பயணம் செய்ய ஏறினேன்,முன் பின் பக்க வழிகாட்டிப்ப லகைகள் பழுதானதால் நடுத்துனரை கேட்டேன்,அவரை தொட்டு எங்கே செல்கிறது இந்த பேருந்து என வினவினேன்?அவரோ முதலில் என் கையை வேகமாக எடுத்து விட்டு "ஏறுடா அங்கதான் போகுது" என ஏக எகத்தாள தோணியில் என்னிடம் கடின விசத்தை கக்க வேண்டிய அவசியம் என்னவோ?.நடுத்துனர் என்றல் அனுதினமும் ஆயிரம் டன் மின்சாரத்தை பயணிகளிடம் பாய்ச வேண்டுமா என்ன?.பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவியில் இருந்தால் வெறுப்பாகி போவார்கள் மக்கள்.
#இதுவும் அப்படிப்பட்ட சம்பவமே!அரசு வங்கியில் ஒரு முதியவர் தனது சந்தேகங்களை கேட்ட வண்ணம் இருந்தார் ,அந்த வங்கி ஊழியர் வெறுப்போடு தனது பதில்களை விட்டெறிந்தார்,அவருக்கு போதிய விளக்கம் கிடைக்காமல் மீண்டும் கேட்டார்,,.மிகவும் எரிச்சல் அடைந்த ஊழியர் முதலில்"போயா"என்றார் பிறகு "என்னடா வேணும் "மீண்டும் அச்சிலேற்ற முடியாத ஆபசமான வார்த்தைகளால் ஒருமையில் வசைபாடினார் மற்ற ஊழியர்கள் அவர் அவர் வேலைய பார்க்க இதுவும் ஒரு ஓரத்தில்...
#செய்யும்_தொழிலே_தெய்வம் என்பதை மறந்த போலி பூசாரிகள் இவர்கள் .,.,.அவ்வளவு கடினமாக இருந்தால் இவர்கள் எதை மழிக்க வேலைக்கு வருகிறார்கள் என்பதே இவர்கள் முன்பு நான் வைக்கும் கேள்வி?
சக மனிதரை மதிக்க தெரியாத மா(கா)சுள்ள மாணிக்கம் இவர்கள், எங்கே சொல்வது என யோசித்த பைன் உங்கள் முன் வைக்கிறேன் என் ஆழ்மன பதிவுகளை!!நன் அனைவரயும் குற்றம் சொல்லவில்லை,குற்றம் செய்தவர்களை சுட்டிக்காட்டுகிறேன்.
ரௌத்திரத்துடன்,
ஆரூர் ராஜன்