வாசல் வரை வந்தவளே
கல்லறையின் ...
வாசல் வரை வந்தவளே ...
உள்ளே வர என்ன தயக்கம் ???
"இறந்த என்னை" பார்க்க...
- உனக்கு மனம் வரவில்லையா?
இல்லை;
இறந்த பின்னும்; "என்னை" பார்க்க ...
- உனக்கு மனம் வரவில்லையா?
காரணம் எதுவாக இருந்தாலும் சரி ...
என் அருகில் வந்து விடாதே ...
உன் மூச்சு காற்று பட்டால் நான் எழுந்து விடுவேன்.
மறுபடியும் உன் மேல் காதலில் விழுந்து விடுவேன்.
ஒரு முறை இறந்ததே போதும் .
மீண்டும் இறக்க எனக்கு விருப்பம் இல்லை ...!!!
-மகேஷ்