பஞ்சை பராரிகள் முக்கியமா உண்டு கொழுத்தவன் முக்கியமா

பஞ்சை பராரிகள் முக்கியமா...? உண்டு கொழுத்தவன் முக்கியமா..?

ஐ.நா அவையின் அறிக்கையின் படி, இந்தியாவில் 19.46 கோடி மக்கள் பட்டினி மற்றும் போதிய ஊட்டச்சத்து இன்றி வாடுவதாகவும்.....

இதில் குழந்தைகள் 1.95 கோடி பேர் எனவும்.....

உலகிலேயே.....இந்தியாவில் தான் பட்டினிச் சாவுகள் அதிகம் எனவும் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதனை தடுக்க இந்தியா போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

உணவு இல்லையெனில் செத்துப்போ....யோக செய்தால் உண்டு கொழுப்பவன் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் அல்லவா...?

உணவு முழுக்க கலப்படம்...போதாக்குறைக்கு பூச்சிக்கொல்லி மருந்து...ரசாயன உரம்...உணவுப் பொருட்களில் குவிந்து கிடைக்கின்றன....

இந்த கலப்பட / ரசாயன உணவுகளால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து உட்கொண்டால்...அந்த மருந்துகளிலும் கலப்படம்...மற்றும் தரமற்ற மருத்துவம்....

இதுல சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவன் சுவிட்சர்லாந்து / நியுசிலாந்து போ என்று கூப்பாடு போடும் காவி மூடர்கள் கும்பல் ஒருபக்கம்....

அதாவது முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இந்திய மக்கள் குறித்து சொன்னதை.......நிரூபிக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான காவி கூட்டம் முயன்று வருகின்றன எனலாமா...?

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Jun-15, 3:36 pm)
பார்வை : 279

மேலே