தாயே நீ என் வாழ்க்கை கவிதைக்குள்....

எட்டுக்குஞ்சுகள் சிறகடிக்க....

தன் குஞ்சுகளுக்காய் தாய்க்குருவி தனை மறக்க....

கடைக்குஞ்சு எனைத்தாய் அணைக்க....

ஒற்றுமையான குஞ்சுகள் என்று ஊர் மணக்க....

முடியாது அந்த நாட்களை மறக்க.... .............. திடீரென தாயை குஞ்சுகள் இழக்க....

குஞ்சுகள் அனைத்தும் துடித்திருக்க....

ஓர் குஞ்சு அம்மா வருவாயா என்றழைக்க....

இன்னோர் குஞ்சு அம்மா போகாதே என்ரனைக்க....

எட்டுக்குஞ்சுகளும் திணறடிக்க....

தாய்க்குருவி பறந்ததுவே இறை அழைக்க....

எழுதியவர் : தோழி (12-May-11, 11:11 am)
சேர்த்தது : faheema
பார்வை : 454

மேலே