இந்நாள் பொன்னால் ஆக

அதிகாலை குயில் பாட்டும்

மெல்லிய குளிர் காற்றும்

சேவலின் கொக்கரிப்பும்

சிறு குழந்தையின் சினுங்களும்தான்

கதிரவனை எழுப்பியதோ!

துயில் கலைத்து
துணை கொடுங்கள் அவனுக்கு
இந்நாள் பொன்னால் ஆக!

எழுதியவர் : ஹன்சிகா (19-Jun-15, 10:59 am)
Tanglish : innaal ponnaal aaka
பார்வை : 99

மேலே