இது அதுவாவென தெரியவில்லை

அது ஒரு
தவிர்க்க முடியா
விரைவாய் அமைந்த
அலுவல் பயணம்
என் அபிமான
மேலாளரால்.


அழைத்தாவது
சொல்லியிருக்க வேண்டும்
இல்லை
குறுஞ்செய்தியாவது
அனுப்பியிருக்க வேண்டும்


இரு நாள் கழித்து
அழைத்த என்னிடம்
கொஞ்சம் வசையையும்
கொஞ்சம் கண்ணீரையும்
துளிர்த்து விட்டாய்.


துளிர்த்துவிட்ட
கண்ணீரில்
கொஞ்சமாய்
அரும்பியிருந்தது
காதல்
நம் நட்பிலிருந்து.

எழுதியவர் : தர்மராஜ் (19-Jun-15, 2:32 pm)
பார்வை : 86

மேலே