விளையாட்டு மைதானம்
அவள்
சிறுபிள்ளை தனமாக
விளையாட்டாக விளையாட நினைத்த
விளையாட்டு மைதானமாகி போனது
என் இதயம்
ஆம் இது உண்மை
அவள்
விளையாட்டு-என்
இதயத்தில் ;கடைசி சொட்டு
இரத்தம் தீரும் வரை………………..
உணர்வுகளும்; உணர்ச்சிகளும்
தீர்ந்து போய் -தோய்ந்து போன இந்த உடல்
எலும்புகளாய் மண்ணுக்குள் போகும் வரை………….
{என் தந்தைக்காக (இது என் தந்தையின் கவிதை........அவர் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தாலும் அவருடைய எண்ணமும் எழுதும் இவ்வுலகில் வாழ வேண்டும்)}