விடுமுறை

எதிர்பாரா வியப்பாய்
அன்று அறை வந்தவள்
அது ஏன் அப்படியிருக்கு
இது என்ன இப்படியிருக்கு
லூசு பைத்தியம்
என்றெல்லாம் புகழ்ந்துகொண்டே
சென்று

சமையலறை பூனை
திடுமென தாவிட
ஓடி வந்தணைத்துகொண்டாள்
“எப்படியாவது நாளை
முதல் வேலையாய்
பத்து பூனைக்குட்டி வாங்கி
வந்து விட வேண்டும்”
இது என் மனக்குரல்

அந்த நொடி
அப்படியே நீளாதா
என எண்ணம்
வைத்த வேளையில்
பிரிய மனமின்றி
பிரிந்து புறப்பட்டு
சென்றுவிட்டாள்

வழக்கம்போல்
மறுநாள் அழைத்த
என்னிடம்
பேசாத காரணம்
எல்லை மீறிவிட்டாளாம்
என்னிடம்

அதுவரை
அமைதியாய் கேட்டு
செய்வதறியாது
திறுதிறுவென விழித்த
காதல்
அன்று விடுப்பு
எடுத்துக்கொண்டது.

எழுதியவர் : தர்மராஜ் (21-Jun-15, 5:00 pm)
Tanglish : vidumurai
பார்வை : 105

மேலே