கதவு

கதவுகள் ஓர் காவல் காரர்கள்!!
அவர்கள் காசு வாங்கா ஓர்
காவலர்கள்!!
இருந்த இடத்தில் இருந்தே
வேலை பார்ப்பார்!!
இரவிலும்,பகலிலும் உழைப்பார்!!
காவல் நிலையக் கதவுகள் மூடாது,
ஆனால்,காவலர்கள் உள்ளே
துயில்வார்!!
இங்கோ,வீட்டினுள் கதவுகள் மூடிவிடும்,
ஆனால் நின்று கொண்டு வேலை
பார்ப்பார்!!
கதவுக்கு ஒரு கர்வ குணம் உண்டு!!
அது தன்னலம்!!
ஆயிரங் கோடி சொத்து இருந்தும்
எங்களை நம்பியே நீங்கள் துயில்கீர்கள் என்ற
அந்த கர்வ குணம் உண்டு!!
அதனால் தான் கர்வம் பிடித்து ,தன்னலம் பிடித்து நின்று
கொண்டேவேலை பார்க்கும்!!
அமராது!!
மனிதர்களே!! கதவை இடித்து
பிடித்து முட்டீயே மூடாதீர்!!
அது,
உங்கள் செல்வங்களை
காப்பாற்றுகிறது!!
உங்களை காப்பாற்றுகிறது!!
உங்கள்
உறக்கத்திக்கும்,கனவுக்கும்
அது வழி விடுகிறது!!
ஆதலால்,அதனை முட்டி
மூடியே மிதிக்காதீர்!!
அது கோபம் கொண்டால்,
தன் மேனியில் முட்டிய காற்றை
தடுக்காமல் திறந்து விடும்!!
அவர் திறந்து விட்டாள் திருடர்கள்
உள்ளே நுழைந்து விடுவார்!
திருடர் நுழைந்தால்,காலையில்
நீங்கள் படுத்த கட்டில் மட்டுமே
மீதமாய் இருக்கும் உங்கள் வீட்டில்!
இனியேனும் நீங்கள் அதனை முட்டியே மூடினால்
மன்னிப்பு கேளுங்கள்!!
கதவும் ஓர் இடத்தில் காதலித்து
கலவை கொள்கிறது!!
அதன் காதலியின் பெயர் 'பூட்டு'!!
இவர் இருவரும் அன்பு அங்கே இருந்தால் தான் உங்கள் செல்வம் காக்கப்படும்!!
மனிதர் காதலை புதைப்பது போல்,
கதவின் காதலையும் புதைக்காதீர்!!
அவர்கள் சாதி விட்டு,மதம் விட்டு
காதலிக்க வில்லை!!
தங்கள் தாழ் என்ற மனம் பிடித்து
காதலித்தார்கள்!!
கால அறிவில் கதவுகள் எல்லாம்
கலர் கலராய் வருகிறது!!
அதை எல்லாம் வாங்காதீர்!!
நல்ல காவலர்கள் தான்
நாடு காப்பார். அதனை என்றும்
மறவாதீர்!!♥