உன் பார்வை ஒன்றே போதுமே 555
என்னவளே...
உன்னை எதிரில் பார்க்க வேண்டும்
என்று நான் நினைக்கும் போதெல்லாம்...
எதிர் பார்க்காமல்
நிகழ்ந்து விடுகிறது...
எப்படியும் சந்திக்கலாம்
என்று இருந்த நாட்களில் எல்லாம்...
பெய்யும் மழை சாலையோரம்
உன்னை தேடும் போது...
எதிர்படும் தெரிந்தவரின்
முகம்...
என்றைக்குமே இல்லாமல்
அன்று மட்டும் உன்னை சூழ்ந்து வரும்...
உன் தோழிகளின்
எண்ணிக்கை...
எதிர்ப்பட்டு விடும் நாட்களில்
உன் முகம் மறைக்கும் குடை...
தடைகள் பல இருந்தும் நான்
எதிர்பார்த்து கொண்டு இருக்கும்...
உன் பார்வை மட்டும்
என்னை நோக்கி தூரமாய்...
இன்று தானடி கிடைத்தது
உன் பார்வை...
இன்று உன் பார்வை
நாளை என் பிரியமானவளே.....