நான் பல முறை பிறக்கின்றேன்
நான் காணாததை காணும்போது
பிறக்கின்றேன்...
நான் படிக்காததை படிக்கும் போது
பிறக்கின்றேன்...
நான் வாழாத வாழ்க்கை வாழும்போது
பிறக்கின்றேன்...
நான் செய்யாத தவறை செய்யும்போது
பிறக்கின்றேன்...
நான் காணாத மரணம் வரும்போது
இறப்பில் பிறக்கின்றேன்...