24-06-2015 கருத்திலே பூத்த கவிகள்

மருத்துவரய்யா கண்ணியப்பரின்
247925 பதிவில் எழுதியது.

குடி நீட்டித்த வழி ஆற்றாளாகிய தலைவி தனக்குத்தானே சொல்லிக்கொள்வது:

காதலித்தவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிக் கண்ட இடங்களில் வீழ்ந்து கிடப்பவனாகி விட்டான் என்று அறிய வந்த தலைவி அவனோடு இனி ஏன் மணம் செய்துகொள்ள வேண்டும் , வேண்டாம் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லி நிற்பது.

ஏந்தல் என,நினைத்(து) ஏகினான் நண்பருடன்!
வாந்தி எடுத்துவழி வீழ்ந்திருந்தான்! - சார்ந்த
இனத்தோடு தன்மானம் எங்கோ தொலைத்தான்!
மனத்தோ டுனக்கேன் மணம்!
ஏந்தல்= உயர்ச்சி; ஏகினான்=சென்றான்;
============ ==========

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (24-Jun-15, 8:05 pm)
பார்வை : 74

மேலே