அம்மா நீதி கேளம்மா
ஆயிரம் விண்மீன்கள் இருத்தும்
நிலவில்லா வானம்
வீண் தானே அம்மா
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தும்
நீ இல்லா நான்
வெறுமன் தானே அம்மா
எங்கே சென்றாலும் தேடி
வருவாயே அம்மா இன்று
உன்னை நான் எங்கு தேடுவேன்
நீயின்றி நானேதம்மா
நீயில்லா உறவுகள்
எனக்கெதற்கம்மா
யார் கூப்பிட்டாலும்
சொல்லிவிட்டு செல்
சொல்லிவிட்டு செல்
என்பாயே அம்மா
நீ ஏன் சொல்லாமல் சென்றாய்
சொல் அம்மா
யார் அவன் எமன்....
என் தாயை
என்னிலிருந்து
பிரிக்க???
இப்பூவுலகில்
பாவிகள்
பலப்பேர் இருக்க
என் பூந்தாயை
பறித்து செல்ல
காரணம் என்ன???
நீதி கேளம்மா????