பெண்ணின் ஆசை

என் அழகை கண்டு
ஆசை கொள்ளாமல்
அகத்தை கண்டு
ஆசை கொள்ளும்
ஆண்மகனாக இருக்க வேண்டும் .

அழகு பெண்கள்
மோகம் கொண்டு
அழைத்த போதும்
அவன் கண்ணியம்
தவறாமல் இருக்க வேண்டும் .

ஆயிரம் தொல்லைகள்
தொடர்ந்து வந்தாலும்
அவன் தொல்லையில்
தொலைந்து போக -என்னை
ஏங்க வைக்க வேண்டும் .

அவனால்
என் மூளை இழந்து
அவனுக்கான
முட்டாள் ஆக்கப்பட வேண்டும் .

என் பசியை மறந்து
அவன் பசிக்கு
நானே உணவாகும்
வசியம் தெரியும்
வல்லமை பெற்றிருக்க வேண்டும்.

அனைத்திற்கும்
ஆமா சொல்லாமல்
அவ்வப்போது அடங்கிபோக வேண்டும் ...

சண்டையிடும் போதெல்லாம்
மண்டியிடாமல் ,
மன்னிப்பு கேட்க வேண்டும் .

கண்ணீர் சிந்தும்போது
விலகிச்செல்லாமல்
அன்பால் அணைத்திட வேண்டும் .

கேலிசெய்யும் போதெல்லாம்
கோபம்கொல்லாமல்
என்னோடு சேர்ந்து
போலியாய் சிரிக்க வேண்டும் .

நான் முறைக்கும் போது
அவன் சிரிப்பால் என்னை
சிறைபிடிக்க வேண்டும் .

காலம் தவறி
என்னுயிர் பிரிந்துவிட்டால்
தாரம் தேடமேல்
பிள்ளைகளுக்கு அவனே
தாயாய் மாறிடவேண்டும் .

எழுதியவர் : சேர்த்தவரே . (25-Jun-15, 12:18 pm)
Tanglish : pennin aasai
பார்வை : 487

மேலே