கடற்கரைக் காதல்...
கருத்திலே சங்கமித்து கை பிடித்து
கூட்டிச் செல்லும் காதலனோடு
பலூன் பல துப்பாகியால் சுட்டுத் தீர்த்து
சுட்ட மக்காச்சோளத்தை சேர்ந்து கொறித்து
எதிர் காற்று முகத்தில் அறைய
அவன் முகம் நோக்கி நான் நடை நடக்க
ஆகாயம் கடலோடு சேர்வதை
அசர்ந்து போய் சேர்ந்து பார்க்க
கடலுக்குள்ளே சென்று கால் நனைக்க
அலையோடு பயந்து போய் அவன் பிடிக்க
தண்ணிக்குள் தள்ளி விட்டு நான் ஓடி விட
தொப்பலாய் நனைந்து அவன் நொந்து போக
செருப்பைக் கையிலெடுத்து திரும்பி நடக்க
அவனும் வழி இல்லாமல் பின்னால் வர
வண்டியில் ஏறும் வரை கோபத்தில் போக
வண்டியை நான் அழுத்த அவன் விழுந்து விட
பஞ்சு மிட்டாய் வாங்கி அவனை வழி பண்ணி
ஒரு வழியாய் வீடு வந்து நான் சேர
இப்படியாய் காதலித்து கடற்கரையில்
காதலனோடு கொண்டாடுவேன்...