மென்மைக் காதல்...
என்னைத் தேடி அவன் வந்தாலும்
அவனைத் தேடி நான் போனாலும்
நொச்சு நொச்சுன்னு பேசிக் கிட்டே
நடுவுல நறுக்குன்னு கிள்ளிக் கிட்டே
பட்டு பட்டுன்னு அரஞ்சுக்கிட்டே
திடீர் திடீர்னு மிரட்டிக்கிட்டே
நல்லா ஜாலி ஆ நடக்கணும்
நடந்துகிட்டே இருக்கணும்...
இத்தனை நாள் நான் இல்லாமல்
கஷ்டப்பட்டு தனிமை பட்டதை
அவன் சொல்ல நான் கேட்டு ரசிக்கணும்
நான் இல்லாமல் அவன் இல்லைன்னு சொல்லணும்
தொல்லை விட்டதுன்னு அவன் நினைச்சால்
அடி வாங்கியே அவன் ஓடணும்...