காற்றோடு காதல் பறக்க...

சில்லென்ற காற்றின் பின்னே
துள்ளி ஓடுது எந்தன் உள்ளம்
காற்றாய் நான் ஆன பின்னே
நானும் வீசுவேன் காற்றாக...

பனி மூட்டத்தோடு கை கோர்த்து
பசுமையில் சஞ்சாரம் செய்து
பரதேசி எனக்காக வந்த காற்றை
சிறை பிடிக்க எனக்கொரு ஆசை...

காற்றோடு காதலாகி என்ன செய்ய?
கள்வனை போல் வருடி ஓடும் காற்றை
கட்டிப் பிடிக்கவும் முடியவில்லை...
கட்டிப் போடவும் திராணி இல்லை...

காணாமல் போகும் காற்றை
கண்கள் கொண்டு என்ன செய்ய?
உருவம் இல்லாக் காற்றுக்கும் தான்
உரு கொடுக்கும் தெம்பும் இல்லை...

மனிதனாய்ப் பிறந்த நானும்
மகிழ்ந்திருக்க தென்றல் வேண்டும்
மூச்சுக் காற்றாய் என்னுள்ளே
கலந்திருக்கத் தான் வேண்டும்...



எழுதியவர் : shruthi (13-May-11, 3:26 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 368

மேலே