என் காதலே

என் காதலே

காதல் என்று கூறி
என் அருகில் வந்தாய்...
நானோ அது காமம் தான்
என கூறி உன்னை
வார்த்தைகளால் நோகடித்தேன்...
நிருபித்து நிருபித்து சோர்ந்த
நீயோ உன்னவளாய்
மற்றொரு மங்கையை
மணந்தாய்...நானோ
தினம் தினம்
மணந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை...உன்னை
பெற்றெடுத்தவள் என்முன்
கைகூப்பி நிற்கும்போது
உனையே உயிராய் நேசிக்கும்
நான் உன் உயிரை பயிரிட்டவளின்
ஆசையையா பழிவாங்க நினைப்பேன்...
இது தெரியாத முட்டாளாய்
நினைத்து கொண்டிருக்கிறாய்
உன் முதல் காதல்
தோற்றுவிட்டது என்று...

எழுதியவர் : இந்திராணி (27-Jun-15, 3:16 pm)
Tanglish : en kaathale
பார்வை : 110

மேலே