இரவுப்பொழுதில் அர்ஷத்

விளக்கு விழிக்கும் இரவுப்பொழுதில்
கசியும் நேரம் மசியும் தேகம் இன்பமடி
ஒளிரும் கூச்சம் ஒளியும் போது மோட்சமடி...!!!

இலைமேல் துளியாய் நான் - தனிமையடி
துளி தாங்கும் இலை நீயானால் இனிமையடி ...!!!

பருவம் சுமக்கும் வெள்ளை புறாவே
உன் வானில் நானிருப்பேன் தூரிகையாய்
அவிழ்ந்த மயிரிறகும் ஆகும் மயிலிறகாய் ...!!!

என்னை திறந்து உன் பார்வை துகள்கள்
உள்ளே நுழைந்து உணர்வில் கலந்து அலைவதேன்
மயங்கி சரிந்து தயங்கி மனம் குலைவதேன் ...!!!

என் மேல் படரும் உன் பார்வை சுடரும்
என்னில் பட்டு உயிரை தொட்டு அள்ளுதடி
என்னை விட்டு உன்னோடு மனம் செல்லுதடி ...!!!!

எழுதியவர் : அர்ஷத் (27-Jun-15, 3:10 pm)
பார்வை : 120

மேலே