குஞ்சம் சிரிங்க
மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது
சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே?
அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை!
ஜாக்கிரதை!'' ""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான்.
பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
கீலே வாங்கடா
கணவன்
பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''