யார் அந்த தேவதை
முதன் முதலில்
அவளை நான் பார்த்தது
அங்கு தான்...
பலமுறை பழகிய அனுபவம்...
அவள் அவ்வளவு அழகு...
அவளுக்கு நான் பொருத்தம் தானே
என்று பலமுறை
எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்...
எங்களின் முதல்
சந்திப்பிலேயே அவள்
விழிகள் நீர் துளிகளை
சுரந்து கொண்டிருந்தது...
அவள் விழிநீரை
துடைக்க முடியா
ஆற்றாமையில் ஆதங்கத்தில்
என் விழிகளிலும் சில
நீர் திவலைகள்...
இன்பம் துன்பம் என்று
அத்தனை உணர்ச்சிகளையும்
கொட்டிய அந்த தேவதை
யாரென்று எனக்குள்ளே
அதிசயித்து கேட்டேன்...
எங்கிருந்தோ ஒரு அசரிரீ!
அவள் தான் உன்
உதிரதாய் என்றது...
ஆம்!அவளுக்கும் எனக்குமான
முதல் சந்திப்பு இதுதான்...
ஆனால் முன்பே
பழகிய அனுபவம்
கொட்டிகிடக்குது என் நெஞ்சுக்குள்ளே...