இன்னும் கொஞ்சம் மழைதுளிகள் வேண்டும்

மழை நீர்க்குமிழிகளில்
பயணிக்கிறது காற்று
இலைகளில்
ஓய்வெடுத்த பின்
இதோ மீண்டும்
பொழிகிறது இரண்டாவது மழை
ஆன் பெண்
மழை துளிகள் புனர்ந்து
அந்த நீரோடை பிறந்திருக்கும்
உன்னை நனைத்த
மழை துளிகளுக்கு
உன் பேரழகு தெரிந்திருக்கும்
தழுவிக்கொள்ள கொள்ள
எதுவாய்
நம்மை தீண்டுகிறது
மழையில்
நனைந்த ஈரக்காற்று
நம்மை மறந்து
நம் விரல்கள்
நம் மெய் மேய்கையில்
குடைக்காலான்களில்
தஞ்சம் அடைகிறது
இருவரின் வெட்கம்
யாருமற்ற இரவில்
இன்பதுளிகளில்
நாம் நனைய
இன்னும்
கொஞ்சம் மழை துளிகள் வேண்டும் .