நானும் தமிழன்

'காகிதத்தைக் கண்டதும் கண்ணீர் விட்டது அவன் கையில் பேனா'.
அவன் கையில் மட்டும் அல்ல, என் கையிலும் ஒரு பேனா கண்ணீர் விடத் தொடங்கியது ஒரு சிறுகதையாய் இங்கே இணையத்தளம் மீது..,

'பேன்டசி' எனும் கற்பனை கதைகள் எழுதுவதில் மிகவும் பிரபலம் 'சேம்ஷ்நாத்'.இவன் பெயரை கேட்டதும் ஏதோ வெளிநாட்டு
வாசி என்று நினைத்து விடாதீர்கள் இவன் இயற்பெயர் சுவாமிநாதன் வயது 26 கும்பகோணத்தில் பிறந்தவன்.ஆங்கில நாளிதழ் ஒன்றில் தொடர்கதைகள் எழுதுபவன் கை நிறைய சம்பளம். ஆதலால் அவன் நடை, உடை வாழ்க்கையே புதியாய் மாறிப்போனது 'எல்லாம் புதிது பெயர் மட்டும் பழையதா' என்று சேம்ஷ்நாதாக மாற்றிக் கொன்டான்.

எல்லாம் இருந்தும் எதையோ இழந்தவன் போல் இருந்தான்.ஏதோ ஒரு விசயம் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்ததை அவன் கண்கள் தெளிவாய் காட்டிக் கொடுத்தது.
அவன் எழுதும் கதைகளுக்கு கதைக்கருவைத் தேடி புதுப் புது இடங்களுக்கு படை எடுத்தான். புது முகங்களைத் தேடி அலைந்தான் அவர்களின் செயல்களை கண்காணிக்கத் தொடங்கினான்.

அன்று ஞாயிறு
விடுமுறை நாள் சாலையோர மெஸ்'ஸில் காலையுணவு சாப்பிட்டு முடித்துவிட்டு கைகளில் நான்கு மசால் வடைகளை வாங்கி தின்றுக் கொண்டே எதையோ யோசித்தபடியே கடற்கரையோரம் நடக்கத் தொடங்கினான்.
பல்லாயிரம் மக்கள் அவன் கண்முன்னே இருந்தனர்.
அதில் ஒருவரை தேர்வு செய்து அவர்களின் செயல்களை கண்கானிக்க நினைத்தான். யாரைத் தேர்வு செய்வதென்று குழப்பமாய் இருந்தான்.
உடனே, தன் கண்களை மூடி ஒன்றிலிருந்து ஐம்பது வரை சொல்ல வேண்டும் ஐம்பதின் முடிவில் கண்களை திறக்க, யார் எதிரே தோன்றுகிறாரோ அவரின் செயல்களை கண்கானிக்க முடிவு செய்தான்.

அப்படியே செய்து கண்களை திறக்க ஒரே ஆச்சரியம்!
ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான்.ஏனென்றால் முதன்முதலில் அவன் கண்களில் பட்டது ஒரு தெரு நாய்.அதற்கு காரணம் அவன் கையிலிருந்த மசால் வடை.
வாயில் ஜொள்ளு வழிய வால் ஆட்டிக் கொண்டே நின்றது அந்த நாய்க்குட்டி.
சரியென்று ஒரு வடையை அந்த நாய்க்குட்டிக்கு தூக்கி எறிய அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டிக்கொண்டே அவனையே சுற்றித் திரிந்தது.இவன் அந்த நாய் செயல்களை கண்கானிக்க நினைத்தால் தலைகீழாக அவன் செயல்களை நாய் கண்கானிக்க ஆரம்பித்து விட்டதே என்ற கோபத்தில் அதை விரட்டி அடித்துவிட்டு மறுபடியும் கண்கள் மூடி ஒன்று, இரண்டு என என்னத் தொடங்கினான்.

இந்த முறை யார் நம் கண்ணில் படப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்போடு ஐம்பதை என்னி முடித்து கண்களை திறந்தான்.
இந்த முறை எதிரே ஒரு குழந்தை அழுது கொண்டே இருந்தது.அந்த மழலையின் செயல்களை கண்கானிக்க முடிவு செய்தான்.
எதற்கு இந்த குழந்தை அழுகிறது என்ற கேள்வியோடு அவர்களின் உரையாடலை உற்றுப் பார்த்தான்.

'மம்மி...! எனக்கு பேப்பர் வேனும்.

எதுக்குடா பேப்பர்? இப்பதா ஐஸ் க்ரீம் வேணும்னு அழுத, வாங்கி கொடுத்தேன் அதான் இருக்கு இல்ல கையில.

இல்ல மம்மி நேத்து டி.வியில பார்த்தேன்.

'ம்ம்ம்', என்ன பார்த்த?

அது வந்து..வந்து!! ஒரு சின்ன பாப்பா பேப்பர ஜெராக்ஸ் பண்ணுவான் மம்மி...அதுல இருந்து கலர் கலர் சாக்லெட்ஸ் வரும் நானும் அப்படி பண்ணணும் ஜெராக்ஸ் கடைக்கு கூட்டி போவியா?

அதெல்லாம் வேண்டா..! வீட்டுக்கு போய் ஓம் ஒர்க் பண்ணலாம்..வா போலாம்.

இல்ல..எனக்கு! நீ கூட்டிட்டு போ (என அழத் தொடங்கினான்).

சரிடா..அழுகைய நிறுத்து கூட்டிட்டு போறேன்!.

உடனே, அந்த மழலை அம்மாவின் கைவிரல்களை பிடித்துக் கொண்டான். இருவரும் தெருமுனைக்கு சென்றனர்.

மம்மீ! இந்த கடையில ஜெராக்ஸ் இருக்கும்!

சரி கேட்கலாம் வா! மெதுவா..மெதுவாடா...!

அந்த கடையில், வெள்ளை காகிதத்தை ஜெராக்ஸ் செய்ய அந்த மழலை எதையோ எதிர் பார்த்திருந்தான்.ஆனால் கிடைத்தது இன்னொரு வெள்ளைக் காகிதமே!

ஆமா மம்மி! ஜெராக்ஸ் பண்ணா கலர் சாக்லெட்ஸ் வரலையே...டி.வியில அந்த பாப்பா 'லுலுலாய்'க்கு பண்ணிருக்கு இல்ல...

ஆமா செல்லம், நான் தான் அப்பவே சொன்னயில்ல..! என்று சொல்லி தோளில் ஏற்றிக் கொண்டாள்.

அவர்களின் உரையாடலை கேட்டுவிட்டு ஐந்து நிமிடம் தன் கண்களை மூடிக் கொண்டான்.

மறுபடியும் ஒன்று, இரண்டு என்னத் தொடங்கினான் ஐம்பதின் முடிவில் இரண்டு கதைக்கருக்கள் அவன் மனதில் நின்றது...ஒன்று 'வாலாட்டும் ஜீவன் நாய்..', இரண்டு 'தாலாட்டும் ஜீவன் தாய்'.

இந்த கதைக்கருவை கொண்டு கற்பனைக் கதைகள் எழுதத் தொடங்கினான் தன் தாய்த்தமிழில்..அதற்கு சில வினாடிகள் முன்பே ராஜீனாமா கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தான் அந்த ஆங்கில நாளிதழிற்கு. கடைசியில் சேம்ஷ்நாத் என்பதை நீக்கி சுவாமிநாதன் ( நானும் தமிழன்) என்று எழுதி
முடிக்க அவன் கண்கள் தெளிவானது..என் கையில் பேனாவின் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.

எழுதியவர் : அரிபா (2-Jul-15, 1:56 am)
சேர்த்தது : ஹரி
Tanglish : naanum thamizhan
பார்வை : 403

மேலே