காதலின் சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறேன்...

நீயோ
என்னைவிட்டு
நிம்மதியாய்
பிரிந்து விட்டாய்...
உன்னிடமிருந்து
என்னையும்
நிரந்தரமாய்
பிரித்துக் கொண்டாய்...
நினைவுகளின் பிடியில் சிக்கி
சிதைந்து கிடக்கிறேன் நான்...
உன் நினைவுகள்
என்னுள்
நெருப்பைத்தான்
கொட்டுகின்றன...
காதலின்
சிலுவையை சுமந்து
கொண்டிருக்கிறேன்...
பல நேரங்களில்
தனியாக..
சில நேரங்களில்
சுமையாக..

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 4:01 pm)
பார்வை : 394

மேலே