தட்டிக்கேட்பதும் நட்பின் கடமை
தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!
தவறு
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -15