சாப்பிட வாங்க

அவரை
எனக்குத் தெரியும்.
அந்த
நெடுஞ்சாலையோரத்து
பிரம்மாண்ட
உணவகத்தின் முகப்பில்
அன்றாடம்
அவரைப் பார்க்கலாம்
வழிப்போக்கர்களையெல்லாம்
உணவருந்த வரும்படி
மெய்வருந்த
அழைத்துக் கொண்டிருப்பார்
இப்படியழைக்கிறாரே
இவருக்கு
வாய் வலிக்காதா
இப்படியழைக்கிறாரே
இவருக்குத்
தொண்டை வறளாதா
இப்படியழைக்கிறாரே
இவருடைய
தேநீர் இடைவேளை
எப்போது
இப்படியழைக்கிறாரே
இவர் சம்பளம்தான்
எவ்வளவு
என்றெல்லாம்
நினைத்துக் கொண்டிருப்பேன்
விடை விரும்பாத
அந்தக் கேள்விகளை
அவருக்காக
திடீரென்று
ஒரு நாள்
அவர் கையில்
சாப்பிட வாங்க
என்கிற அட்டை
வாயில் விசில்
அப்பாடா,
இனியவர்
மெய்வருத்த வேண்டாம்
அந்த
அட்டையுமே
விசிலுமே
பார்த்துக் கொள்ளும்
அவர் வேலையை
என்று
சற்றே
ஆசுவாசப்பட்ட மனம்
சட்டென்று
திடுக்கிட்டது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (2-Jul-15, 10:48 pm)
Tanglish : sappita vaanga
பார்வை : 213

மேலே