இனிய தேவதைக்கு

ஆறு மணிக்கே எழுப்பியது
உனக்கான கவிதை!

ஒரு தேவதூதன் வந்தான்!
துயில் எழுப்பி
நீ சொல்லியதாய்
வாழ்த்து சொன்னான்!
ஒரு நிமிடம் என்னை
உற்று பார்த்து விட்டு
தலையில் அடித்து
கொண்டான்
"வாழ்வுடா" என்று!
தேவதூதர்களுக்கும்
பொறாமை
என் மீதான உன் அன்பில்!

எழுதியவர் : பொன்னரசு (4-Jul-15, 11:17 pm)
பார்வை : 96

மேலே