குழந்தைமை 2

தன்
அம்மாவின்
மடியில்
உட்கார மறுத்து,
அப்பாவின்
தொடையில்
அடித்து,
மாமாவிடம்
முரண்டு பண்ணி,
அத்தையைப்
போடி சொல்லி,
பாட்டியிடமும்
அடம்பிடித்து,
இரண்டாம் வகுப்புப்
படிக்கும்
தன் அண்ணனுக்கு
ஜன்னலோர இருக்கை
தராமல்
விடாப்பிடியாய்
அமர்ந்த
அந்தக் குட்டிப்பாப்பா
பேருந்து புறப்பட்ட
பத்தாவது நிமிடத்தில்
தூங்கிப்போனாள் !

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (6-Jul-15, 6:33 pm)
பார்வை : 151

மேலே