பெயர்கள்
பெயர்கள்.!
**********************************************
ஒரு தலைவனின் பெயர்
முன்னுதாரணம்.!
ஒரு விடுதலை வீரனின்
பெயர் தியாகம்.!
ஒரு மன்னனின்
பெயர் வரலாறு.!
ஒரு புலவனின்
பெயர் இலக்கியம்.!
ஒரு கவிஞனின்
பெயர் புத்தகம்.!
ஒரு கலைஞனின்
பெயர் காவியம்.!
ஒரு விஞ்ஞானியின்
பெயர் சாதனை.!
ஒரு வெற்றியாளனின்
பெயர் சரித்திரம்.!
உன் பெயரை வெறும்
அடையாளமாக்கி விடாதே.!!
உன் பெயர் உனக்கு
அடையாளம் ஆகவேண்டாம்.!
நீ உன் பெயருக்கு
ஒரு அடையாளம் கொடு..