அவள் வருகைக்காக

தெரியவில்லை என் மனதுக்கு
காதலா?காமமா ?என்று
அவள் மீது கொண்ட காதல்.
சில நாட்கள் அவளோடு பழகினேன்
பல நாள் அவள் நினைவோடு வாழ்கிறேன்
உயிரென்று நினைக்கின்றேன்
உறவாட துடிக்கின்றேன்
உள்ளுக்குள் மிதக்கின்றேன்
காதல் என்னும் மதுவருந்தி .
தினம் தினம் சாகின்றேன்
அவள் திரு முகம் காணாமல்
ஆசைதான் அவள் பத்து
விரல்கள் தொட்டு பேச
ஏக்கம்தான் அவளை தொட்டு
பேசாமல் இருப்பதால்
சின்னதாக ஒரு முத்தமிட்டு
ஒரு முறை அவை கரம் பிடித்து
அவளோடு தனிமையில் இருக்க ஆசை
அவள் என்னுடன் பழகியது
எந்த முறை என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் அவளை என் காதலி என்று பழகினேன்
இரு விழிகளும் ஏங்குகின்றன
அவள் வருவாளா என்று
தன முகத்தை காட்டுவாளா என்று
கடல் அலைபோல என் இருதயம் இடம் மாறி மாறி என்னை அலைமோத
வைக்கின்றது அவள் இல்லத்தின் முற்றத்துக்கு
என் கால்கள் அவள் செல்லும் திசையை நோக்கி செல்கின்றது ஒரே நேர்கோட்டில்
திசை மாறாமல் போகும் ரயில் போல
அவள் இதயத்தோடு என் இதயம் தஞ்சம் புக விழிவைத்து காத்திருக்கிறது
அவளோடு நான் இணையும் நாள் எப்போது
வரும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றேன்
அவள் வரும் வரை காத்திருப்பேன்
என் உயிர் உள்ளவரை
அவள் வருகைக்காக.

எழுதியவர் : (9-Jul-15, 4:38 pm)
Tanglish : aval varukaikaaka
பார்வை : 235

மேலே