தாமரை

தாமரை

தடாகத்தில் மலரும் மலரே
பூக்களில் புதுமையான உயிரே
தும் எனத் தோன்றி
தமர் என மறைந்து
தாமரையாக உருவானாயே

எழில் கொஞ்சும் சோலையில்
சிரிக்கும் பெண்ணாக
தண்ணீரின் நடுவில்
உந்தன் இடம்

தேசத்தின் தேவதையே
கல்வி தாயின் இருப்பிடமே
காலங்கள் போற்றும் காவியமே

உன் இதழ்களில்
இருக்கை வேண்டி
இரு கை கூப்பி வணங்குகின்றோம்
இடம் கிடைக்குமா என்று ...

. கௌதம்

எழுதியவர் : கௌதம் (11-Jul-15, 11:52 am)
Tanglish : thamarai
பார்வை : 212

மேலே