அவளின் அடையாளச் சின்னங்கள்

இரவுக்கு அழகூட்டும்
நிலவு போல-என்
கனவுக்கு அழகூட்டும்
காதலியே-உன்

இளமை அழகினை
எங்கு வைத்தாய்-அந்த
இயற்கை அழகுதனை
பங்கு வைத்தாய்-என்
கனவினில் நமாட
கதவினைத் தட்டுகிறாய்-நான்
ஏரெடுத்துப் பார்த்து விட்டால்
எதெற்கென்னைத் திட்டுகிறாய்-உன்

அங்கத்தின் புலனெல்லாம்
அடையாளச் சின்னங்களோ
தங்கமாய் சொலிக்குதடி-நீ
எங்குபோய் நின்றாலும்

கருப்பு கூந்தலிலே
கால்தவறி நான் விழுந்தேன்-உன்
சிரிப்பு புன்னகையில்
சிறு துகளாய் சிதறிவிட்டேன்
மறுப்பு சொல்லாதே என்னவளே-நான்
செறுப்பாய் தேய்திடுவேன் உடனிருந்தால்

உன் தலையில் சூடிக்கொள்ள
மலராவேன்-நீ
மழையில் நளையும்போது
குடையாவேன்-உன்
இடையில் சொறுகும்போது
உடையாவேன்
இதையெல்லாம் நீமருத்தால்
தடையாவேன்-உன்

கருப்பு கண்ணிரன்டை
கடன்கேட்டால் கொடுத்துவிடு
மிரட்டும் உன்னழகை
மீதமின்றி தகர்த்துவிடு
உன் விரலோடு வாழ்வதற்கு
நகதத்திற்கு உரிமைகொடு-உன்

விழியோரம் வருகின்ற
கண்ணீரை விற்றுவிடு-அந்த
கால்மிதி தடத்தினை
காணிக்கை தந்துவிடு
என்னவளே உன்னிதயம்
எனக்காக கொடுத்துவிடு

என்மூச்சு சுவாசத்தை
உனக்காக நிறுத்திவிடு
என்னுடல் குறுதியில்
உன்னினைவு ஓடவிடு-அந்த
ஒருநாள் மரணத்தை
திருநாளாக்கிவிடு

மறுநாள் பிறந்துவிட்டால்-உன்
மடிமீது தவளவிடு
மரணமே மருத்துவிடு
எம் காதல்
மறு ஜெம்மம்
தொடர்ந்து விடும்

எழுதியவர் : முருகன் (11-Jul-15, 2:54 pm)
பார்வை : 210

மேலே