வாக்குரிமை அது எமக்குரிமை

நாதியற்றுக் கிடக்குது
நம் தேசம்
நாவன்மை குறைந்த
நயவஞ்சக வேடதாரிகளால்!
கருத்தற்றுப் போனதால்
காடேறிப் போனது
கயவர்களின் செயலால்
கனி தரும் எம் பூமி!
ஆளையாள் பலி கூறி
அனைத்தையும் இழந்து
அடுத்தவர் கைக்கு மாறியது
அனாதையாய் ஆவணம் இன்றி!
செஞ்சோற்றுக் கடனுக்காய்
சிலையாய் நின்று
சீர் செய்ய எமக்கு
சிந்தை மயங்கவில்லை இன்னும்!
வார்த்தையால் சூடேற்றி - எம்
வரம்பெற நீ நினைப்பதற்கு
வரையரை தெரியா
வம்பர் அல்ல நாம்!
வாக்குரிமை எமக்குரிமை!
வறுமை என்பதால்
உனக்குரிமையாகாது
வாக்குறுதி செயலுருபெறு மட்டும்!!
ஜவ்ஹர்