மலட்டு கற்பனைகள்
மண்ணில் தவழும்
என் மடி மீன் ,
விண்ணில் தெரியும்
நிலவு அது இனி வீண் ,
என் மார்பு முட்டும்
மலர் இது ,
சிறு விரல் கொண்டு
எனை மட்டும் விழுங்குது ,
நான் மட்டும் அறிவேன்
அதன் மொழி ,
எனை மட்டும் அறியும்
அதன் விழி
இப்படி
எத்தனையோ
மலட்டு கற்பனைகள்
எனைப் போல
என் கனவுகளுக்கும் ………