காதலாக

ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு சிரிப்பிலும்
உன்னை தொட்டு விட முயலும் உன் கூந்தல் முடிகளை
மீண்டும் சிறையில் தள்ளுகிறாய் உன் கைவிரல்களால்

எத்தனை முறை நீ சிரித்தாலும்
அத்தனை முறை நான் விழுந்தாலும்
விழாமலே இருக்கிறது உன் முந்து பற்கள்

தொலைவாக இருந்தாலும் சரி
தொடும் அருகில் இருந்தாலும் சரி
தொலையாத உன் நினைவுகள்

வெட்ட்கத்தின் பள்ளி கூடத்தில்
வெள்ளி கிண்ணம் தங்க பரிசை
ஒவ்வொரு முறையும் தட்டி செல்கிறாய்
என் இதயத்தில்

மீண்டும் மீண்டும் கேட்டாலும்
மீண்டும் மீண்டும் கேட்கவே நினைக்கிறது
என் செவிகளில் ஒலிக்கும் உன் குரலை

அர்த்தமில்லாத பேச்சுக்கள்
அர்த்தம்மில்லாத பார்வைகள்
அர்த்தம்மில்லாத சிரிப்புக்கள்
அத்தனையும் தான் அர்த்தம்மாகிறது
காதலாக..,

எழுதியவர் : காந்தி (13-Jul-15, 10:57 am)
Tanglish : kathalaga
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே