அறிவியலும் என் காதலியும்
சாய நீராய் இருந்தேனடி
ஹைட்ரஜன் பெர்ராக்சைடாய் வந்தாயடி
காதலெனும் ஹைட்ராக்சில் அயனி கொண்டு
மனதை சுத்தம் செய்தாயடி
............................................................................................
போட்டான் கொண்டு உன்
விழிகள் தாக்கியதில் என் காதல்
எலெக்ட்ரான் போல் எகிறி குதிக்குதடி
பரவச நிலையில் நான்
...........................................................................................
அனுக்கருவாய் நீ இருக்க
என் மனமோ
அணுத் துகளாய் உன்னையே
சுற்றுதடி
.........................................................................................
மின்மாற்றி போல் இருக்காதே
என்காதலை
தேக்கும் மின்தேக்கியாய்
இரு
........................................................................................
ஹைட்ரஜெனை பிரிந்த
ஆக்சிஜன் போல்
வறண்டு கிடக்கிறேன்
வந்து இணை தாகம்
தணிக்கும் நீராவோம்
......................................................................................
நீ என்ன என் வயற்றில்
சுரக்கும் ஐட்ரோக்ளோரிக் அமிலமா
நீ இல்லாத நொடிகளில்
பசிப்பதே இல்லையடி
..................................................................................
தென் துருவத்திலும்
வட துருவத்திலும்
ஈர்ப்பு விசை அதிகமாம்
மடையர்கள்
உன் விழி ஈர்ப்பை காணாதவர்கள்
................................................................................
எக்ஸ் கதிரும் தோற்குதடி
உன்னை போல்
என்னுள் ஊடுருவ முடியாமல்
..............................................................................
ஊடல் கொண்டு
அணுக்கரு பிளவு போல்
அணுகுண்டை வீசாதே
நான் இரோசிமா நாகசாகி
போல் நாசமாகிறேன்
.............................................................................