காத்திருக்கும் கிளிகள்
காத்திருக்கும் கிளிகள்
மவுனமாய் பேசும்
ஊமை இவளே யென்று
உன்னோடு நான் பேசும்
மெளனமே சுக மென்று...
கானல் நீரோடு சேர்ந்தே
தாகம் தணிக்கும் உனைக்
காணாத வாழ்வும் உண்டோ?.
இமைக்கும் விழிகள்
இணைந்தே கிடக்க
நினைக்கும் கரங்கள்
சேர்ந்தே நிற்கும்
இரு தண்டவாளங்கள் போல....
அலைவீசும் புயற் காற்றாய்
மனம் அலைந்தே திரியும்
அங்கே ஓர் சுகம் இருந்தே தணியும்
பனியில் பூத்த புல்வெளி போல....
நீங்காத நினைவுகள் அதை
நிதமும் கொடுத்தாய்
பாரம் அதைத்தான் தாங்கிடுமோ
குறையாமல் நீங்கிடுமோ?
காற்றாகிய எந்தன் உள்ளம் தான்
அதில் களங்கம் ஏது?
ஊற்றின் ஊற்றாக நீயும் வந்தாய்
உனையன்றி இனி துணையேது?
பாதைகள் தெரியா படகில்
நான் மிதந்தே மீண்டேன்
பார்வைகள் இருந்தும் குருடாய்
இருளில் அலைந்தேன்.....
உனைத் தேடி நினைக்கும்
என் இதயம் தெய்வமாய்
நின்னை துதிக்கிறதே
ஒன்றாய் இணை வோம் நினைவில்
வேறாய் வாழ்வோம்உறவில்....
கண்டும் காணாமல் காட்சிகள்
கண்முன்னே அலையாடுதே
காதலை தந்ததும் காவியம்
வடித்திட ஏனோ நினைக்கின்றதே...
மழைத்துளியாய் நீ விழுந்தபின்னே
நான் மரணிப்பதேது சிறு புல் தானே
இணை வோம் வாழ்வில்
உலகம் உள்ளவரை.