II -திகிலூட்டும் பின்புறங்கள்-ரகு

முன்னால் ஆடும்
பொய்க்கால் குதிரையின்
லஜ்ஜையில் லயிக்கப் பழகினோம்
அகோரத் தாண்டவங்களைப்
புறமுதுகில் அடக்கிக்கொண்டு !

யானை தன் தலையில்
மண்ணை வாரி இரைப்பது
பின்புற மொய்ப்பின்
மூர்க்கத்தினால்
செழிப்பில் கொழுத்துவிடக்
கறுப்புப் பூனைகளும்
மண்ணாய் இரையுமிங்கு

அசாதாரணமாக
உருவகம் பூண்டு
அகிம்சை முன்னிற்க
ஆயிரம் கோட்சேக்கள்
ஒளிந்திருக்கக் கூடும்
அதன் பின்புலத்தில்

அழகையும் ஒப்பனையையும்
முதன்மைப் படுத்தும்
மனித இயல்பு
தன் பின்புற ரகசியத்தில்
அமானுஷ்யம் வளர்க்கவும்
தவறுவதில்லை

முன்னோக்கிய பயணமிது
அதிலொன்றும் அபத்தமில்லை
பின்னால் ஒலிக்கும்
செந்நாய்களின் ஓலம்
என்ன செய்துவிடக்கூடும்
பிரபஞ்சத்தின் பெருவாழ்வை!

எழுதியவர் : சுஜய் ரகு (14-Jul-15, 3:40 pm)
பார்வை : 119

மேலே