எதிலும் இருப்பாய் இசையாய்

[”மான் கண்ட சொர்க்கங்கள்… காலம் போகப்போக யாவும் துக்கங்கள்”
பாடலின் இசைகொண்டு இவ்வரிகளைப் படிக்கலாம்...பாடலாம்]
***********
தேன் சிந்தும் பாடல்கள்
யாரும் பாடப்பாட கூடும் இன்பங்களே…
தேன் சிந்தும் பாடல்கள்
யாரும் பாடப்பாட கூடும் இன்பங்களே…
வான் மிதக்கும் கானங்கள்
பூமழையாய் நம் உயிரை நனைக்கின்றதே?!
வான் மிதக்கும் கானங்கள்
பூமழையாய் நம் உயிரை நனைக்கின்றதே?!
***
பாட்டினை வாங்கிடுவாய்
மெட்டினை அமைத்திடுவாய்
உள்ளமும் கொள்ளாத
போதையை தந்திடுவாய்
தள்ளாடும் நெஞ்சங்கள்
எப்போதும் உன்பெயரை
கொண்டாடுது
நேற்றைக்கு ஒரு பாடம்
இன்றைக்கு சுகப் பாடல்
நாளைய புதுத் தேடல்
யாவிற்கும் முன்னோடி
பாடாத ராகங்கள் போடாத
தாளங்கள் இல்லையே!
***
பாட்டினை பாடிடுவாய்
பாவத்தை வடித்திடுவாய்
மயக்கும் குழைவாலே
குயிலினை வென்றிடுவாய்
அரிதாரம் போட்டாலும்
தப்பாது அதிலேயும்
அசத்திடுவாய்
இசையில் நீ மன்னன்
நடிப்பில் நீ கண்ணன்
தேடுதுஎனது விழி
தேம்பியே அழுதபடி
இசையோடு இசையாக பிரியாமல்
நிலைப்பாயே எப்போதும்
***
நாட்டினை ஆண்டவரும்
நடிப்பில் உயர்ந்தவரும்
வியக்கும் இசையாலே
வெற்றியை கண்டாரே
கொண்டாடும் தெய்வங்கள்
உன்பாடல் கேட்டேதான்
மகிழ்ந்தாடுது
இறவாத இசையாக
மறையாத புகழாக
வையத்தில் இருப்பாய்
வைரமாய் ஜொலிப்பாய்
நீயில்லா இசை மேடை
நீரில்லா வெறும் பொய்கை
***
உடலால் மறைகின்றாய்
இசையாய் நிறைகின்றாய்
சென்றிடும் காலமது
சொல்லிடும் சாதனையை
உள்ளாடும் பாரங்கள்
மெல்லிசை கேட்டாலே
விலகிடுமே
வாழ்வின் சோதனையை
வருத்தும் வேதனையை
தீர்க்கும் அருமருந்து
தெவிட்டா இசைமருந்து
மண்மூடி போனாலும்
நீமீண்டு வருவாயே இசையாக !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (14-Jul-15, 3:53 pm)
பார்வை : 240

மேலே