தங்கைக்கு ஒரு வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு தங்கையே ...

சாய் அருளால்....எல்லா வளமும் ... எல்லா நலமும் பெற்று
வாழியவே.... நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு ....

எட்டி பிடிக்கும் தூரத்தில் தான்...

இதுவரை நீ எட்டி பிடிக்காத வாழ்வு ....

இறையருளால் இனி ...எல்லாம்

ஜெயமே உன் வாழ்வில் ...

ஆம் ஏற்றம் மட்டுமே இனி

எட்டி பார்க்கும் உன் வாழ்வில் ....

மகிழ்ச்சி பூக்கள் மட்டுமே

மலர்ந்திடும் இனி உன் வாழ்வில் ....

தாயாய் என்னை அரவணைத்து

நிற்கின்ற என் அன்பு தங்கையே ...

என்னில் உயிருள்ள காலம் மட்டும்

உனக்காய் வாழ்ந்திருப்பேன்

உன் வளமான வாழ்விற்கு உறுதுணையாய் .......

என்றும் அன்புடன் ....

உன் அன்பு அண்ணன்

எழுதியவர் : கலைச்சரண் (17-Jul-15, 12:26 pm)
பார்வை : 249

மேலே