பிம்பத்தின் பிரிகையில் - தேன்மொழியன்

பிம்பத்தின் பிரிகையில்..
~~~~~~~~~~~~~~~~~~

திரளும் கருமையில்
தாகத்தின் தீபமவள் ..

தீபத்தின் தேகத்தில்
விழியெனும் சுடரவள் ..

சுடரின் நுனிக்குள்
வெட்கத்தின் விரலவள்..

விரலின் நடனத்தில்
ஆன்மாவின் தேடலவள்..

தேடலின் மீதத்தில்
முடிவிலியின் வேகமவள்...

வேகத்தின் சுழற்சியில்
பிழையிலா பிம்பமவள்..

பிம்பத்தின் பிரிகையில்
ஊடகத்தின் உயிரவள் ..

உயிரின் உணர்வினில்
மரணமிலா காதலவள் ...

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் ( இராஜ்குமார் (17-Jul-15, 5:47 pm)
பார்வை : 179

மேலே