போதும் என்பது கிடைத்துவிட்டால்
போதும் என்பது கிடைத்துவிட்டால்,
மீதம் என்பது மிகுதியாய் தோன்றும்....
வேண்டும் என்பது தொடர்ந்துவிட்டால்,
பிறரை (இறை) வேண்டும் நேரம் நீண்டுவிடும்...
வேண்டாம் என்பது தெரிந்துவிட்டால்,
உடனே வேடம் களைந்துவிடும்...
தேடல் என்பது இல்லாவிட்டால்,
வாழ்கை என்பது பொருளிழக்கும்...
எதை தேடுவது என்பது தெரிந்துவிட்டால்,
வாழ்வில் உண்மையான பொருளிருக்கும்...
முரண்பாடுகளாய் தோன்றும் வரிகளில்,
முயற்சி செய்தால் ஒற்றுமை தோன்றும்...